அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், ஆஸ்திரேலியா வாழ் தமிழ் முஸ்லிம் இனையம் உஙகளை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் ஆக்கங்களையும் என்னங்களையும் எழுத்துக்கலாக இங்கே பதிய aussitamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி தரவும்-

குர்ஆனில் தினமும் ஒரு ஆயத்

உங்கள் ஈ-மெயிலிள் தினமும்ஒரு குரான் ஆயத் கிடைக்க‌

இங்கே க்ளிக் செய்யவும்

இந்தபக்கத்தை உங்கள் முகப்பு பக்கமாக ஆக்க

இங்கு Click here to make homepage க்ளிக் செய்யவும்

ரமளான் மாதத்தின் .........

சிறப்புகளும் சட்டங்களும் : இங்கே

Linked to IslamKalvi.com, Ramadan Malar

க்ளிக் செய்யவும்

Daily Quran Ayah in English

Baby names

halal E-code

இன்று உங்கள் ஊரில் தொழுகை நேரம்

தினமும் ஒரு திருக்குறல்

தினமும் ஒரு திருக்குறல்

திருக்குறல்

ச‌ட்றுமுன் கிடைத்த​செய்திகள்

world news

Saturday, June 30, 2007

குர்ஆனின் நற்போதனைகள் :வெற்றியாளர்கள் யார்?

(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130 எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். 3:185 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். 4:13
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் விலகிக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். 5:90
அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்" 6:16
அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8
எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். 22:77
உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61
எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும். 45:30
(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 64:16

No comments:

முக்கிய நகரங்களின் தற்பொதைய நேரம்

பாங்கு மென்பொருள்

உங்களுக்கான மினி வெப்

உங்கள் விருப்பம்

உங்கள் வருகை